
பிரான்சில் டொமினிக் பெலிகாட் மற்றும் கிசெல் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர்களுக்கு 72 வயதாகிவிட்டது. கடந்த 2011 முதல் 2020 வரை மொத்தம் 10 ஆண்டுகளாக டொமினிக் பெலிகாட் தனது மனைவிக்கு தெரியாமல் உணவு மற்றும் பானங்களில் போதை மாத்திரை அல்லது தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். அதன் பின் அவர் மயக்க நிலை அடைந்ததும் ஆண்களை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார். அதாவது இப்போது தடை செய்யப்பட்ட வலைதனமான Coco.fr மூலம் கிராமத்தின் அருகே உள்ள பகுதியில் சுமார் 51 ஆண்களை வரவழைத்து அவர்களை கிசெலை பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் டொமினிக் பெண்களின் பாவாடையின் கீழ் புகைப்படம் எடுத்ததை சூப்பர் மார்க்கெட் பாதுகாவலர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரது செல்ஃபோனை ஆராய்ந்த போது மேல்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இந்த வழக்கு பிரான்ஸ் சட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. இதில் கிசெலை பலாத்காரம் செய்தவர்களில் 27 பேர் 74 வயது உடைய ஆண்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில் பலாத்காரம் செய்த 51 பேருக்கும் 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டொமினிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.