அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு DMK ஆட்சிக்கு வந்து 2 1/2 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. பொம்மை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி ஏற்று…  யாராச்சு சொல்றாங்களா ? 16 வயதிலேயே கோபாலகிருஷ்ணன் என நம் கமலஹாசன் சொல்லுவாரு… பத்மினி சொல்லி இருப்பாள்  இனிமேல் உன் பேரு கோபாலகிருஷ்ணன் அப்படி கூப்பிட்டா தான் திரும்பி பார்க்கணும்.

எவன் கேக்குறான் மயிலு… எல்லாரும் என்ன சப்பாணி… சப்பாணி என தான் கூப்பிடுறாங்க. அந்த மாதிரி சப்பாணி மாதிரி இருக்காரு நம்ம முதலமைச்சர். அவரை யாரும் முதலமைச்சருன்னு சொல்றதில்லை…  இன்னைக்கு எதிர்க்கட்சி தலைவரா இருக்காரு…  முதலமைச்சர் போல இருக்கனும் என்றால் ?  அது எடப்பாடியார் போல இருக்கனும்…

ஒரு சாமானியன்,  ஒரு விவசாய குடும்பத்தில் வந்தவர்,  ஏழைகளின் உடைய நிலையை அறிந்தவர்,  ஆட்சி செய்தவர்,  சொல்லன்னா துயரத்தை கொடுக்கக் கூடிய கொள்ளை நோய் என்று மக்களால் பயந்து நடுங்கக் கூடிய…  கொரோனாவையே அடக்கிய வல்லமை திறமை படைத்த ஒரு முதலமைச்சர் நம்முடைய அண்ணன் எடப்பாடி என தெரிவித்தார்.