பொதுவாக நம் வீட்டில் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் பொருட்களில் ஒன்று தேங்காய். இது மிகச் சிறந்த இரத்த சுத்திகரிப்பு உணவுப்பொறி என்றே கூறப்படுகிறது. தேங்காயின் மருத்துவ தன்மைகள் இதயம், கல்லீரல், சிறுநீரகம் குறைபாடுகளை கலைக்க கூடியதாம். மேலும் தாகம் தணிக்கவும் உடலின் சூட்டை தணிப்பதற்கும் இதைவிட சிறந்த ஒன்று இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

சமணற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரை பருகுவதால் தணிக்க முடியும் என்றே சொல்லப்படுகின்றது. வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதை விட அதிக புரோட்டின் தேங்காயில் இருக்கிறது. இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமானத்திற்கு மிக ஏற்றது. குழந்தைகளுக்கும் மிக உகுந்தது. தீவிர வயிற்றுப்புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100 முதல் 200 மில்லி தினமும் இளநீரை இரண்டு முறை பருகலாம்.

சிறப்புமிக்க தேங்காயை முறைப்படி துருவவில்லை என்றால் அது ஆபத்தில் முடியும் என்று கூறப்படுகின்றது. அது என்னவென்றால் தேங்காயை துருவும்போதே அதில் இருக்கும் தேங்காய் ஓட்டோடு சிலர் துருவி விடுவார். ஆனால் அப்படி செய்வதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் தேங்காயில் அதன் ஓட்டுடன் சேர்ந்து துருகும்போது அந்த ஓடு சில நேரங்களில் குடல் புண்களை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது. எனவே கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.