நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இது இந்தியா கூட்டணி அல்ல ஒரு ஆணவ கூட்டணி. இது இந்தியா கூட்டணி அல்ல கமெண்ட்டியா கூட்டணி. இந்த கூட்டணியில் ஒவ்வொருவரும் மாப்பிளை ஆக விரும்புகின்றார்கள்,  அனைவரும் பிரதம மந்திரி ஆக விரும்புகிறார்கள்.

மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  இந்த கூட்டணி எதை பற்றியும் யோசிக்கவில்லை. எந்த மாநிலத்தில் எந்த கட்சியுடன் சேர்ந்து இருக்கிறார்கள் என்பது பற்றி யோசிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் TMC_யும் , கம்யூனிஸ்ட்_உம் எதிர்ப்பு இருக்கின்றன. டெல்லியில் எதிர்க்கட்சிகள்,ஆதிர் பாபு 1991இல் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போது, ஆதிர் பாபுவோடு கம்யூனிஸ்ட் பார்ட்டி என்ன செய்தது ? என்பதை இப்போது நினைத்து பார்க்க வேண்டும்.

1991 பழைய விஷயம் அதை மறந்து விடுவோம். கடந்த வருடம் கேரளா வயநாட்டில்…  யாரெல்லாம் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தினார்களோ,  அவர்களுடன் எல்லாம் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள்.

வெளியில் நீங்கள் உங்களது லேபிளை மாற்ற முடியும். ஆனால் பழைய விஷயங்கள் என்ன ஆகும் ? அந்த நினைவுகள் எல்லாம்  எங்கே செல்லும். இவை அனைத்தையும் நீங்கள் மறைத்து விட முடியாது. இப்போது இவர்களுடைய நிலைமை என்ன ?

இப்போதைய நிலைமையில் இவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துள்ளனர். ஆனால் நிலைமை மாறும் போது இவர்கள் கைகளில் இருக்கும் கத்தி வெளிப்படும். ஒருவர் முதுகில் ஒருவர் குத்திக் கொள்ள பயன்படும் கத்தி வெளிப்படும் என தெரிவித்தார்.