மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் காவல்துறையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் முழுமையாக கையாள முடியவில்லை என்ற நிலை தான் உள்ளது.

தமிழ்நாட்டில் தினமும் கொலை சம்பவங்கள், போதைப்பொருள் பழக்கங்கள் சகஜமாக புழக்கத்தில் தான் உள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.