
மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது தற்போது ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சித் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த புதிய வழக்கில், ரஞ்சித் ஆபிஸில் வாய்ப்பு கேட்டு வந்த இளைஞரை அவரை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இளைஞர் புகாரளித்ததைத் தொடர்ந்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.