
உலக அளவில் அதிக UPI செயலிகள் பயன்படுத்தும் நாடாக இந்தியா முன்னணி வகிக்கிறது. குறிப்பாக கூகுள் பே செயலியை பணப்பரிவர்த்தனைக்கு பலரும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் பேமெண்ட்களை இன்னும் எளிதாக்க Buy Now Pay Later என்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதாவது பயனரின் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கடைக்காரரிடம் பணம் செலுத்தலாம். இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
நீங்கள் அவசரமாக ஏதாவது பொருளை வாங்கி விட்டு கூகுள் பே செய்யும்போது உங்களுடைய கணக்கில் பணம் இல்லாமல் இருந்தால் Google pay செயலியில் Buy Now Pay Later என்ற அம்சம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதில் குறிப்பிட்ட தொகையை கடனாக பெற்று பிறகு செலுத்திக் கொள்ளலாம்.
வாலட் செயலியை கூகுள் சில நாட்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்திய நிலையில் இதில் நீங்கள் அனைத்து கார்டு விவரங்களையும் சேர்க்கலாம். ஒருமுறை இதை செய்தால் பிறகு அதிக டென்ஷனாக வேண்டிய அவசியம் இருக்காது. இதனை பேமெண்ட் ஆப்ஷன் உடன் இணைத்து ஈசியாக கட்டணங்களை செலுத்திக் கொள்ள முடியும்.