விஜய் நடித்து வரும் கோட் திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அதை முடித்த பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு முழு நேரமாக தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதனால் கோட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடக்காது என ஒரு தகவல் தற்போது வெளியாகியிருக்கின்றது. பட விழா நடக்கவில்லை என்றாலும் விஜய் அவர் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்த ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தப் போவதாக கூறப்படுகிறது.