
சின்னத்திரை நடிகையாக இருப்பவர் ரேகா நாயர். இவர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இதன் மூலம் அவர் பிரபலமானார். இதைத்தொடர்ந்து சோசியல் மீடியாவில் பல கருத்துக்களை முன்வைத்து பேசி வருகிறார். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் ஆண்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள் என்றும், பெண்கள் அவர்களை கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். அதாவது இன்றைய காலத்தில் ஆண்கள் பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண் அழுது கொண்டே போலீஸ் ஸ்டேஷன் சென்று ஆண் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தால் அங்கு பெண்ணுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் ஆண் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார், எவ்வளவு துன்புறுத்தப்பட்டுள்ளார் என்றெல்லாம் பேச மாட்டார்கள்.
ஆண்களின் குரலை கேட்பதற்கான சமூகம் இது கிடையாது அவர்களின் குறையை யாரும் கேட்பதில்லை. எத்தனையோ மனைவிகள் தங்களது கணவன்மார்களை கொடுமைப்படுத்துகிறார்கள். ஆண்களின் செல்போனை வாங்கி பார்க்கின்றனர். இதே ஒரு பெண்ணின் செல்போனை வாங்கி ஆண் பார்த்தால் உடனே விவகாரத்தை என்று கூறுவார்கள். பெண் தங்களது நண்பர்களுடன் ஊர் சுத்தலாம் சினிமாவுக்கு போகலாம். ஆனால் கணவன் எங்கே போற என்று கேட்டு விட்டால் நான் எங்கு வேண்டுமானாலும் போவேன் இருக்க இஷ்டம் இருந்தால் இரு இல்லை என்றால் போய்விடு என்று பேசுகிறார்கள்.
பெண்களின் வீட்டிலும் கணவன் திட்டினால் வந்துவிடு என்று கூறுகின்றனர். இதை ஆண்கள் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு தவிக்கின்றனர். இதனால் தான் அவர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள் என்று கூறுகிறேன். அவர்கள் சட்ட ரீதியாகவோ சமூக ரீதியாகவோ மிகவும் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறார்கள் என்று ரேகா நாயர் ஆண்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதனை பார்த்த பெண்கள் யாரோ ஒரு பெண் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த பெண்களையும் சொல்வது தவறு என்றும் இப்போதும் பல பெண்கள் ஆண்களால் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.