அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இரண்டாவதாக அமெரிக்க அதிபர் பதவியில் ட்ரம்ப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு வாக்குறுதிகள் குறித்த உத்தரவு பிறப்பித்து வருகிறார். இதன்படி பிறப்பால் குடியுரிமை என்ற கொள்கை அபத்தமானது என்று அமெரிக்கர் அல்லாதவர்களுக்கான குடியுரிமை குறித்து பிரச்சாரத்தின் போது கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொறுப்பேற்ற பின், “அமெரிக்க குடிமகனாக இல்லாத பிற நாட்டு மக்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பிறப்பால் அமெரிக்க குடியுரிமை ரத்து”என அதிரடி உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்தார். இந்த உத்தரவிற்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் வாழும் ஆயிரக்கணக்கான இந்திய பெற்றோர்களை பாதிக்கும் எனவே இந்த உத்தரவிற்கு தடைவிதிப்பதாக நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை மேல்முறையீடு செய்யக்கோரி அமெரிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.