ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அதில் புழுக்கள் அல்லது தவறு இருப்பின், அதன் பொறுப்பு யாருக்குச் செல்லும் என்ற கேள்விக்கு முக்கியமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் நுகர்வோர் மன்றம், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி, உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைத்துள்ளது.

மே 25, 2024 அன்று ஸ்விக்கி மூலம் வெண்ணெய் கிச்சடியை ஆன்லைனில் ஆர்டர் செய்த கௌதம் நகரைச் சேர்ந்த அபிஷேக் தீட்சித், உணவிற்குள் ஒரு இறந்த ஈயைக் கண்டதையடுத்து நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.

விசாரணையின் போது, உணவில் செத்த ஈய் கிடந்தது ஹோட்டலின் அலட்சியத்தால் ஏற்பட்டதாகவும், உணவை வழங்கிய ஸ்விக்கி ஒரு ஊடகம் மட்டுமே என்பதால் அதன் மீது பொறுப்பு இல்லை என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது. வழக்கின் விசாரணை இரண்டு ஆண்டுகள் நீடித்தது. இந்த விவகாரத்தில் உணவகம் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தீர்ப்பில், போபால் நுகர்வோர் மன்றத் தலைவர் யோகேஷ் தத் சுக்லா மற்றும் உறுப்பினர் டாக்டர் பிரதிபா பாண்டே ஆகியோர், உணவக மேலாண்மை தரமற்ற முறையில் செயல்பட்டதாகக் கூறி, ரூ.15,130 இழப்பீட்டை அபிஷேக் தீட்சித்திற்கு வழங்க உத்தரவிட்டனர். இது போன்ற தீர்ப்புகள் எதிர்காலத்தில் உணவகங்கள் தரத்தை பராமரிக்க கட்டாயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.