மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் என்ற அளவில் பதிவான நிலையில் நேபிடோவ், மண்டேல ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோன்று பக்கத்து நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் தற்போது மியான்மரில் பலி எண்ணிக்கை 3,003-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கட்டிட இடி பாடுகளிலிருந்து தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் இன்னும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் 4500 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100 பேருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுவதால் அங்கும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுகிறது.