
டிடிவி தினகரனின் அமமுக கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளனர். அதன்படி தஞ்சை மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலர் மொத்தமாக கட்சியில் இருந்து விலகியதோடு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர். இதேபோன்று காங்கிரஸ், மதிமுக,பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் என பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரும்நிலையில் அதிமுகவினர் கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டதோடு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளனர்.