
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை அறிவாலயத்தில் அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அமைச்சர் த.மோ அன்பரசன் இன்னும் 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இது குறித்தான அறிவுப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கூறிவரும் நிலையில், தற்போது அமைச்சர் த.மோ. அன்பரசன் உதயநிதிக்கு கண்டிப்பாக துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று கூறியுள்ளதா அவருக்கு பதவி கிடைக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.