காஷ்மீரில் நேற்றைய தீவிரவாதிகள் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் ராஜோரி செக்டாரில் டாடா துரியன் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் 6 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த மழை பெய்தது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தீவிரவாதிகள் வேன் மீது பயங்கர துப்பாக்கி சூடு நடத்தினார். மழையின் காரணமாக தீவிரவாதிகள் வருவதை ராணுவ வீரர்களால் பார்க்க முடியவில்லை. தீவிரவாதிகள் வேனின் பெட்ரோல் டேங்கை குறிவைத்து சுட வேலை தீப்பிடித்து எரிந்தது.

இதில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை காஷ்மீர் போலீசாரும் ராணுவத்தினரும் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்நிலையில் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் ஆதரவை பெற்ற மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் அடுத்த மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி வருகிறார். மேலும் இவர் இந்தியாவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.