இந்தியாவில் ஏராளமான மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையை வைத்துள்ளனர். வங்கிகளை பொறுத்து பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றது. அதன்படி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து இதில் பார்க்கலாம்.

எச்டிஎப்சி வங்கி 18 முதல் 21 மாத கால அளவுக்கான வைப்புத் தொகைக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. Icici வங்கி 15 மாத வைப்புத் தொகைக்கு 7.20 % வட்டி வழங்குகிறது. கோட்டக் வங்கி 390 நாட்கள் முதல் 391 நாட்களுக்கு 7.4% வட்டியும், பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாட்களுக்கு 7.30 சதவீதம் வட்டியும் வழங்குகிறது. ஸ்டேட் பேங்க் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகின்றது.