
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார், கடந்த சில மாதங்களாக ஐரோப்பியாவில் நடைபெறும் பல்வேறு கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இவர் தொடங்கியுள்ள ரேசிங் அணி, பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்தநிலையில், தற்போது பிரான்ஸில் உள்ள ரிச்சர்ட் பால் சர்க்யூட்டில் நடைபெறும் கார் பந்தய நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அஜித் குமாரிடம், செய்தியாளர்கள் சில சுவாரசியமான கேள்விகளை முன்வைத்தனர். அப்போது, “F1 சீரிஸ் மற்றும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா?” என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகர் அஜித் குமார், “நிச்சயமாக அந்த மாதிரியான வாய்ப்பு வந்தால் நான் நடிக்க விரும்புகிறேன். அதுவே என் உண்மையான ஆர்வம்தான்.” என்று தெரிவித்தார். மேலும், “என்னை தொடர்ந்து உற்சாகத்துடன் ஆதரிக்கின்ற ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்றும் கூறியுள்ளார்.
முக்கியமாக, ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு பிரபல கார் ரேசர் என்றும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் அஜித் குமார். இவரது இந்த புதிய பயணம், ரசிகர்களிடம் விறுவிறுப்பும் பெருமையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் அளித்த ஹாலிவுட் வாய்ப்புகள் குறித்த இந்த பதில், திரையுலகத்திலும் ரசிகர்கள் மத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.