ஆப்பிரிக்கா நாட்டில் ஜாம்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் மார்கரேட் சோலா என்ற மூதாட்டி (85). இவருக்கு நியூயார்க்கில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்து வரும் ஒரு பேத்தியுள்ளார். இந்த நிலையில் அந்த மூதாட்டியின் பேத்தி நியூயார்க்கில் இருந்து ஜாம்பியாவுக்கு தனது பாட்டியை சந்திக்க வந்துள்ளார். அப்போது அவர் தனது பாட்டிக்கு அழகியைப் போன்ற உடை அணிவது, மேக்கப் செய்து புகைப்படம் எடுத்து உள்ளார்.

இந்த புகைப்படங்களை தனது இணைய பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி பல லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு ஹாலிவுட் வெப் சீரிஸிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.