நாமக்கல் மாவட்டத்திலுள்ள கபிலர்மலை வட்டார தோட்டக்கலை துறை இயக்குனர் சின்னதுரை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கபிலர்மலை பகுதியில் தோட்டக்கலை துறை சார்பாக விவசாயிகள் மூலிகை தோட்டம் அமைப்பதற்கு ரூபாய் 250 மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதில் ஒரு விவசாயிக்கு 10 வகையான மூலிகைச் செடிகள் 20, தென்னை நார்கட்டி  10, மண்புழு உரம் 4 கிலோ, செடி வளர்ப்பு பயிர்கள் 10 போன்றவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில்  மானியவிலையில் மூலிகைச் செடிகள் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல் 1, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 போன்றவற்றை கபிலர்மலை தோட்டக்கலை துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் கபிலர்மலை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று செம்மரங்கள் தேவைப்படும் விவசாயிகள் அதனை பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.