
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக நடித்து வருகிறார். கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக தற்போது ஜெயம் ரவி அறிவித்துள்ளார். நீண்ட காலமாக யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் என்னை சார்ந்தவர்களது நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நல்வாழ்வுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.