அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் வருகிற 27ஆம் தேதி சர்வதேச அகடமியின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவின்போது இந்த வருடத்திற்கான இந்தியாவின் மதிப்புமிக்க சிறந்த பெண்மணிக்கான விருது பிரபல நடிகை சமந்தாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் மயோசிடிஸ் எனும் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் ‌ அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்திய சினிமாவில் பல வருடங்களாக சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதற்காக சமந்தாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் நடிகை சமந்தா இந்த விருதுக்காக நன்றி தெரிவித்துள்ள நிலையில் ஒரு பெண்ணாகவும் கலைஞராகவும் இதனைப் பெற்றுக் கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்