தமிழ் சினிமாவில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற சில படங்களில் ‌ நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி, சபாநாயகன் மற்றும் மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்கள் வெளியானது. இவர் நடிகர் சாய் விஷ்ணு என்பவரை காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று சென்னையில் அவர்களுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் உட்பட அவர்கள் குடும்பமாக சென்று மணமக்களை வாழ்த்தி இருந்தனர். மேலும் திருமண புகைப்படங்களை நடிகைமேகா ஆகாஷ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.