
விமான பயணங்களின் அதிக எடை கொண்ட பைகளுக்கான கட்டணம் என்பது பல பயணிகளுக்கும் பெரிய சிரமமாக உள்ளது. அதிலும் Ryanair போன்ற சில நிறுவனங்கள் கூடுதல் அல்லது அதிக எடை கொண்ட பைகளுக்கு ₹4,000 முதல் ₹7,000 வரை வசூலிக்கின்றன. இதனால், பலர் இந்த கட்டணத்தை தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் டெல்லசைச் சேர்ந்த 20 வயது கிரேஸ் ஹேல் என்ற இளம் பெண், அதில் எல்லை மீறிய உத்தியை கையாண்டுள்ளார்.
இங்கிலாந்திலிருந்து ஸ்காட்லாந்திற்கு Ryanair விமானத்தில் செல்லும் போதே, ஹேல் தனது மேக்கப் பேக் மற்றும் டிரஸ்கள் பைகளில் வைக்க இடம் இல்லை. உடனே தான் ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக நடித்து, அந்த பைகளை தனது உடைக்குள் ஒளித்து ‘களவாட முயற்சி’ செய்தார். 26 வார கர்ப்பமாக அவர் தோற்றமளிக்க, நடக்கும் விதம் வரை ரிஹர்ஸல் செய்துள்ளார். விமான நிலையத்தில் அவரை பார்த்த Ryanair ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
பயணத்தில் எந்தக் கட்டணமும் செலுத்தாமல் விமானம் ஏறிவிட்ட ஹேல், பின்னர் சமூக ஊடகத்தில் இதை பகிர்ந்ததும், இது வைரலானது. “நான் ஒரு ஆண் குழந்தையை எதிர்பார்க்கிறேன்… அவனுக்கு பெயர் ‘Ryan’!” என்று ஜோக் அடித்த ஹேல், விமான கட்டண நியமங்களை விமர்சித்துள்ளார்.
சிலர் ஹேலின் புத்திசாலித்தனத்தை பாராட்ட, மற்றவர்கள் இதை மோசடியென்று கண்டித்துள்ளனர். விமான கட்டணங்களில் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான முறைகள் தேவைப்படுகின்றன என்ற எதிரொலி, இச்சம்பவத்தால் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. விமான பயணிகள் கூடுதல் கட்டணங்களை தவிர்க்க எந்த அளவிற்கு செல்ல தயார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது!