தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதுமட்டுமின்றி மேற்படிப்பு மாணவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்கிறது. அதற்கு பிரதிபலனாக மருத்துவர்கள் இந்த சமுதாயத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்று கூறினர். இதற்கிடையில் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள், 2 வருடம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை நடைமுறையில் இருக்கிறது.