மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க சென்ற காலங்களில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியையும் வெளியிட்டுள்ளது. இதனிடையே அரசு சார்பாக ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த எச்சரிக்கையை ஊழியர்கள் புறக்கணிக்கும் பட்சத்தில் பல பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாக நேரிடலாம்.

மேலும் ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின் ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை இழக்க நேரிடலாம். அதாவது பணியின்போது ஒரு ஊழியர் அலட்சியமாக இருந்தால், ஓய்வுபெற்ற பின் அவரது ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை நிறுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் எதிர்காலத்தில் பல மாநில அரசுகளும் இதை செயல்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.