
தமிழ்நாட்டில் இளைஞருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முதலீடுகளை மேன்மைப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ் கோவில் உலகில் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் 1300 கோடி முதலீட்டில் 4600 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்நிலையில் இந்தியாவில் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க சிகாகோவில் உள்ள அஷ்யூரண்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து ஈட்டன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 200 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் ஈட்டன் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு, பொருளியல் மையத்தை நிறுவ உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் மூலம் 500 பேருக்கு வேலை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.