செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது,  சீமான் அவர்கள் கூட யாரு போனாங்கன்னா…  அவங்க கூட கட்சியிலே தனியா நிக்கிறாரே,  ஏன் தனியா நிற்கிறார் என்றால் ? யாரும் சேர்த்துக்கல. நீங்க இத தப்பா நினைச்சுக்க கூடாது. அவர் தனியா நிற்கிறது ஒரு பெரிய கொள்கையில பாக்காதீங்க. யாரும் சேர்த்துக் கொள்ளாத காரணத்தினால் தனியா நிக்கிறாங்க; இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சி NDA கூட்டணியினுடைய தலைவராக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியை எத்தனை கட்சிகள் ஏற்றுக்கொண்டு…  25 ஆண்டுகளாக NDA கூட்டணியோட பயணம் பண்றாங்க.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 1998இல் NDA வந்து, 2023 இப்போ 25 ஆண்டுகள் நிறைவு பண்ணி இருக்கு. எல்லா கட்சிகளும் எங்களோடு இணைந்து… இந்தியாவினுடைய சக்தியை இன்னும் பலப்படுத்துறாங்க. அப்புறம் எப்படி நாங்க தனியா போவோம் என்று சொல்ல முடியும் ? கேள்வி  சீமான் அண்ணன் கேட்கும் போது அதில் லாஜிக் இருக்கணும். பாரதிய ஜனதா கட்சி NDAவினுடைய பெரிய கட்சியாக இருந்து. அனைவரும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக்கொண்டு இந்தியா முழுவதும் 25 ஆண்டுகளாக சீமான் அவர்கள் சினிமா நடிகராக இருக்கும்போதே NDA  கூட்டணி வந்திருச்சு.

அப்ப அரசியல்வாதி எல்லாம் அவர் கிடையவே கிடையாது. அதனால அவர் புரிஞ்சுக்கணும் ரெக்கார்டையும், டேட்டாவையும் புரிஞ்சுகிட்டடு அவர் பேசணும். அதனால தமிழகத்துல பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலுவாக வளர்ந்து கொண்டே இருக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் கட்சி அடிப்படையில முரண்பாடுகள் இருந்தாலும் கூட,  நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். சீமான் அண்ணனுடைய கொள்கை பேச்சு அதெல்லாம் இன்னைக்கு தமிழ்நாட்டுல வேணும்.  திமுகவை எதிர்க்க நம்ம ஆட்கள் நிறைய வேணும்.

திமுகவினுடைய தவறுகளை நாம் தொடர்ந்து சுட்டி காட்ட வேண்டும். ஐடியாலஜிக்கல் ஸ்டாண்ட் எங்களுடைய கட்சி கொள்கை அடிப்படையில நாங்கள் இருவருமே எதிரும் புதிருமா தான் இருக்கோம். நாங்க ஒரு ஐடியாலஜி வைக்கிறோம். அவர் ஒரு ஐடியாலஜி வைக்கிறார். அந்த ஐடியாலஜி இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது என்னுடைய வாதம்.

அந்த ஐடியாலஜி கிடையாது அது ஆகபூர்வமான ஐடியாலஜி கிடையாது. பார்வேர்ட் லுக்கிங் கிடையாது, டெவெலப்மென்ட் ஓரியண்டட் கிடையாது, இந்தியா என்கின்ற யுனைடெட் கண்ட்ரி ஐடியாலஜி கிடையாது, பாரதிய ஜனதா கட்சியின் ஐடியாலஜி என்பது அனைவரையும் ஒருங்கிணைத்து.. ஒன்றாக இழுத்து செல்லக்கூடிய ஐடியாலஜி. அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியினுடைய ஐடியாலஜி இளைஞர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.