மன்னிப்பு கேட்கும் போது செய்ய கூடாத தவறு குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

எல்லோராலும், எல்லா நேரமும் சரியாக நடந்து கொள்ள முடியாது. அதே போல எல்லோரையும் திருப்தி படுத்த நினைப்பவரால் நிம்மதியாக வாழ முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் தெரிந்தோ, தெரியாமலோ நாம் நேசிக்கின்ற ஒருவரை நாம் கட்டாயம் காயப்படுத்தும் சூழல் ஒன்று ஏற்பட நேரிடும்.

அவ்வகையான தருணங்களில் நீங்கள் தெரிந்தே ஒரு தவறு செய்திருந்தால், அந்தத் தவறை எண்ணி வருந்தி மன்னிப்பு கேட்கும் போது நேரடியாக தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பதே சிறந்த குணமாகும். அதை விடுத்து, மன்னிப்பு கேட்கும் போது இதன் காரணமாகத்தான் இந்த தவறை செய்தேன் என, ஏதேனும் காரணத்தை கூறிக் கொண்டு நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது அது மன்னிப்பாக தெரியாது.

மாறாக நீங்கள் செய்த தவறை மறைப்பதற்காக அல்லது அதை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கும் வாதமாக கருதி அவர்கள் உங்களை தவறாக நினைக்க கூடிடும். எக்காரணமாயினும் தெரிந்தே தவறு ஒன்றை செய்யும் போது, இருக்கக்கூடிய தைரியம் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் போதும் இருந்தால் நல்லது. இந்த தைரியம் இல்லையெனில் மன்னிப்பே கேட்காமல் இருப்பது மிக நல்லது. உங்கள் உறவை மேம்படுத்த நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்குணங்களில் இதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டு தைரியமாக மன்னிப்பை கேளுங்கள்.