எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாஜகவில் மட்டும் இருக்க வேண்டாம் என்று கூறிய நடிகர் கருணாஸ்,  பாஜக இந்த மண்ணுக்கு நல்லதல்ல என்று தெரிவித்தார்.

நடிகரும்,  முக்குலத்தோர் புலிப்படை நிறுவனமான கருணாஸ் தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.ஆரூரில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்,  நித்தியானந்தாவை கும்பிடுகின்ற உங்களிடத்தில் நான் தேவரை கும்பிடுவது என்ன குற்றம் என்று கேள்வி எழுப்பினார் ? அப்படி கும்பிட்டால் என் மீது சாதி அடையாளம் படுத்துவார்கள் என்று கருணாஸ் பேசினார்.

மேலும் பேசிய அவர், நீ dmkல இரு, admkல இரு, வேற எந்த கட்சியில் வேணாலும் இரு. ஆனால் பிஜேபியில்  மட்டும் இருக்காதே. ஏன்னா… எனக்கு அது பிடிக்காது. எனக்கு பிடிக்குது,  பிடிக்கல என்பது மேட்டர் கிடையாது. அது இந்த மண்ணுக்கு நல்லது இல்ல, நமக்கு நல்லதே இல்லை. ஆவுன்னா தேவரை இழுத்துருதாங்க. அவரு பட்டை போட்டு இருக்காரு. ஹேய் பட்டை போடுவதற்கும்,  இதுக்கும் சம்பந்தமே கிடையாதுடா.

சாமி கும்பிடுவதற்கும், இதுக்கும்  என்னடா சம்பந்தம் இருக்குது. சாமி கும்பிடுவதை வைத்து ஒரு கட்சியாடா?  ஒரு கட்சின்னா,  ஒரு கொள்கை வேணாமா ? ஒரு கோட்பாடு வேண்டாமா ?  நம்ம அந்த அரசியலுக்குள்ள போக வேண்டாம். நமக்கு பிடிக்காது. இந்த மண்ணை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உனக்கும்,  எனக்கும் தான் இருக்கு. அவன் அவன் எல்லாம் பண்ணுவான், கத்துவான், ஓடிவிடுவான். இந்த ஊர்ல இருக்க கூடிய பணக்காரன் எல்லாம் பாத்தீங்கன்னா….  மொத தமிழ் காரணமாக இருக்க மாட்டான்,  அதையும் மனசுல வச்சிக்கோ என தெரிவித்தார்.