ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இதன் இறுதிப்போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இதைத்தொடர்ந்து சின்னச்சாமி மைதானத்தில் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது. இன்றைய தினம் நடைபெறும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஏனெனில் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறிய நிலையில், இரண்டாவதாக சிஎஸ்கே அணியும், மூன்றாவதாக லக்னோ அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு ஏற்கனவே 14 லீக் ஆட்டங்கள் முடிவடைந்து விட்டது. இதனால் ஆர்சிபி மற்றும் மும்பை அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மும்பை அணியை விட ராஜஸ்தான் அணி அதிக ரன் ரேட்டில் இருக்கிறது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் ஆர்சிபி என இரு அணிகளும் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் பிறகு ரன்‌ ரேட் அடிப்படையில் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இன்றைய தினம் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்தாலும் குறைவான ரன்கள் எடுத்தால் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் மும்பை அணியை விட ராஜஸ்தான் அணி ரன் ரேட்டில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் ராஜஸ்தானை விட ஆர்சிபி ஆர்சிபி அணிதான் அதிக ரன் ரேட்டில் இருக்கிறது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் ஆர்சிபி அணி இரு அணிகளும் தோல்வி அடைந்து ஆர்சிபி குறைவான ரன்கள் எடுத்தால் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.