”எல்லாருக்கும் எல்லாம்” என்ற கருப்பொருளை கொண்டு மையமாகக் கொண்டு இன்றைய தினம் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார்.  அதில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தான் கிராம சபை கூட்டங்களை  முறையாக தடங்கள் இல்லாமல் நடத்திக் கொண்டு வருகின்றோம். கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒழிக்கணும் தான் இதுபோல கிராமசபை கூட்டங்களில தடையில்லாமல் நடத்து கின்றோம்.  மக்களாட்சி முதல்ல மலர்ந்த இடம் கிராமங்கள்.

காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக  வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. யாரெல்லாம் தேர்தல்ல போட்டியிடறாங்களோ.. அவங்க எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதி குடத்துல போடுவாங்க. அந்த குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பாங்க.  அப்படி எடுக்கப்பட்ட பெயர்ல  யாருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கோ…. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதா ?

அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித் தான் தமிழ்நாட்டுல மக்களாட்சி என்று அமைப்பே மலர்ந்துச்சு. அந்த வகையில் பார்த்தீங்கன்னா….  கிராமங்கள்ல தான் மக்களாட்சி முறையானது முதல்ல தோன்றி இருக்கு. அதுலயும் குறிப்பா கிராம சபை என்ற அமைப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சோழர் காலம் தொட்டு பழக்கத்தில் இருந்து வருது.  சோழப்பேரரசுல ஊர் மற்றும் மகாசபை என்ற இரு வேறு அவைகள் இருந்துச்சு.

இதுல மகாசபையை போன்றது தான் தற்போதைய கிராம சபை என அறிய முடியுது. மக்களாட்சியினுடைய ஆணிவேரா இருக்கிற கிராம சபை கூட்டங்களில்  மக்களே நேரடியாக.. விவாதித்து… தன்னுடைய தேவைகளையும்,  பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும்… வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவதிலும் முக்கிய பங்காற்றி வாரங்க.

இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில சட்டமன்றங்கள் இருப்பது போல கிராம அலுவல கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்க மன்றமா அமைஞ்சிருக்கு. கிராமசபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் என்று தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 குறிப்பிட்டு இருந்தாலும், அதை ஆண்டுக்கு நாலு முறை என முத்தமிழ் அறிஞர் டாக்டர்   கலைஞர் அவர்கள் மாத்தி அமைச்சார்.

தற்போதைய திராவிட மாடல் அரசாணத்தை இதை ஆண்டுக்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று அதிகரித்து இருக்கின்றோம்.  அதன்படி ஆண்டொன்றுக்கு முறையே குடியரசு நாள்,  உலக தண்ணீர் நாள், தொழிலாளர் நாள், விடுதலை நாள், காந்தியடிகள் பிறந்த நாள், உள்ளாட்சிகள் நாள். ஆகிய ஆறு நாட்களில் கிராம சபை நடைபெற்று வருகிறது.  வலுப்படுத்தனும் அப்படின்னா அதுக்கு அதிகாரம் வழங்கணும்.

நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தி தரணும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கு. கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளை மேற்கொள்ளப்படும் பணிகளின்  முன்னேற்றத்தினை கண்காணித்தல், ஊராட்சிகளின் வரவு – செலவுகளை  ஆய்வு செய்தல், பயனாளிகளை தேர்வு செய்தல், திட்ட கண்காணிப்பு செய்தல். ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.  கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் 1000  ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமசபைகள் பல சிறப்பு சேவைகளை செய்கின்ற வகையில் நலிந்தோருக்கும், வரியோர்க்கும்  உதவி செய்ய… மாற்றுத்திறனாளிகளின் நலன், முதியோர் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றில் அதீத ஈடுபாடு காட்டிடனும்.  கல்விக்காக நம் அரசெடுக்கின்ற முயற்சி எல்லாத்தையும் கிராம சபைகள் முக்கிய பாலமாக இருக்கணும். முதலமைச்சரின் கால உணவு திட்டம் தொடங்கி வைத்திருக்கிறேன். உங்கள் குழந்தைகள் இப்ப பள்ளிக்கு போய் சாப்பிடுகிறார்களா ?

தமிழ்நாடு முழுக்க 16 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுறாங்க. அது மட்டும் இல்ல. என்னும் எழுத்தும் திட்டம். பள்ளி உட்கட்டமைப்பு திட்டங்கள். இது மாதிரியான திட்டங்களை நீங்க மேம்படுத்த உதவி செஞ்சு செயல்படுத்தனும். இன்னைக்கு கிராமசபையில் பங்கெடுத்த நீங்க,  பங்கேற்காத உங்க ஊர் மக்கள் கிட்ட போய் சொல்லுங்க. கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்றக் களமா கருதி கலந்துக்கணும். கிராமசபையில் ஊராட்சியோட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை மட்டுமே விவாதிக்கணும்.

ஊராட்சியோட எல்லா பகுதிகளும் முழுமையான வளர்ச்சியை அடைய, அங்கு கூடி இருக்கக்கூடிய  அலுவலர்கள்கிட்ட… அவங்க துறை மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் பற்றி,  தெரிந்து கொள்ள வேண்டும். மகளிர் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகளவில கலந்துகிறத உறுதி செய்யணும். கிராம சபையில அவங்க கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படணும். தேர்வு செய்யப்படுகின்ற பணிகள் பொதுவானதாகவும்,  எல்லோருக்கும் பயன்படக்கூடிய வகையில் இருப்பதையும் உறுதி செய்யவும்.

கிராம சபை நடைபெற்ற விவரங்கள் குறிக்க….  பதிவேடு பராமரிச்சு,  எல்லோருடைய கருத்துக்களையும் பதிவு செய்யணும். நீர் ஆதாரங்கள் பலப்படுத்துதல்,  தண்ணீரின் முக்கியத்துவம். நிலத்தடி நீரினை செறிவூட்டுதல், நீர் நிலைகளை பாதுகாத்தல் போன்ற அக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், சுகாதாரம் பேணுதல், முறையான திட திரவக்கழிவு மேலாண்மை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் உறுதி எடுக்கணும். இதை நிலை நிறுத்துகிற வகையில் எல்லா ஊராட்சி மன்ற தலைவர்களும் மக்கள் பணியாற்றனும்னு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மகளிருக்கு மாசம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற வகையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு கோடியே 6 லட்சத்தி 50 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலமா பயன் அடைந்து கொண்டு வராங்க. விடுபட்டவர்களும் மேல்முறையீடு செய்யலாம் என்கின்ற வாய்ப்ப அரசு வழங்கியிருக்கு. இந்த திட்டத்தில் கிராமப்புற பெண்கள் தான் அதிகமாக பயனடையுறாங்க. ஆயிரம் ரூபாய் என்பது அவர்களுக்கும்,  அவர்களது குடும்பத்திற்கும் ரொம்ப உதவியா இருக்கு.

இன்னும் சொன்னா ஊரகப்பகுதிகள்ல பணப்பழக்கம் அதிகமாக இந்தத் திட்டம் வழிவகை செஞ்சிருக்கு. ஆட்சி பொறுப்பேற்ற அன்றே  மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என்ற விடியல் பயண வசதியை ஏற்படுத்தித் தந்தோம். இதுவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கு. அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்தா அவங்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாசம் மாசம் ஆயிரம் ரூபாய் வழங்கிட்டு வரோம். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தூக்கிட்டு இருக்குறதும்  நம்முடைய கழக அரசு தான். இதன் மூலமா பாசன பரப்பும் அதிகமாகி,  வேளாண் உற்பத்தியும் உயர்ந்துள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு புத்துயிர் வழங்கி விரிவுபடுத்திக்கிட்டு வாரோம். இப்படியாக கிராமங்களோட… கிராம மக்களோட ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் சிறப்பு கவனத்தை திமுக அரசு செயல்படுத்திகிட்டு வருது. அனைத்து துறையும் வளரணும், அனைத்து மாவட்டங்களும் வளர வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகின்றோம்.  நகர்ப்புறங்கள் மட்டும் வளர்ந்தால் போதாது. கிராமப்புறங்களும் வளர்ந்தாகணும். ஒரு மாநிலத்தோட வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சியா  மட்டும் இருக்கக் கூடாது.

சமுதாய வளர்ச்சியா இருக்கணும்னு நான் அடிக்கடி சொல்லிட்டு வரேன்.  அதை செயல்படுத்தி காட்டணும்னா… கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைஞ்சாகணும். இதை மனசுல வச்சு தான்,  எல்லா திட்டங்களையும் செயல்படுத்திட்டு வரோம். இன்று அக்டோபர் 2. அண்ணல் காந்தியடிகளுடைய பிறந்தநாள். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று சொல்லி,  கிராம சுயராஜ்யம் எனும் கிராம தற்சார்பு நிலையை எல்லா கிராமங்களும் அடையணும்னு விரும்பினார். தற்சார்பு உள்ள கிராமங்கள், தன்னிறைவு  பெற்ற கிராமங்கள், எல்லா வசதியும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள், ஆகியவற்றை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு எந்நாளும் உழைக்கும் உழைக்கும் உழைக்கும் நன்றி வணக்கம் என பேசி முடித்தார்.