கடந்த 1998 ஆம் ஆண்டு ‘தில் சே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. தமிழில் இந்த திரைப்படம் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியானது. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் இந்த படத்துடைய பாடல் இன்றும் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தில் மனிஷா கொய்ராலா ஹீரோயினாக நடித்திருந்தாலும் ப்ரீத்தி ஜிந்தாவின் கதாபாத்திரமும் முத்திரை பதித்துள்ளது.

ப்ரீத்தி ஜிந்தா சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் ஐஸ்வர்யாராய், ராணி முகர்ஜி, பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் முன்னணியாக இருந்தனர். அவர்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் ப்ரீத்தி ஜிந்தா மிகப்பெரிய வெற்றி படங்களில் ஹீரோயினாக நடித்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார். ஆனால் 32 வயதில் சினிமாவை விட்டு வெளியேறிய அவர் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

சினிமா மட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் ப்ரீத்தி ஜிந்தா சிறந்த ஆளுமையாக வலம் வந்தார். இவ்வளவு பிரபலமாக இருந்த நடிகை தனக்கு கிடைத்த ரூபாய் 600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வேண்டாம் என்று கூறி இருக்கிறார். ஹிந்தி சினிமா தயாரிப்பாளர் ஷாந்தர் அம்ரோஹி, ப்ரீத்தி ஜிந்தாவை தனது மகள் போல பார்த்துக் கொண்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் உயிரிழப்பதக்கு முன்பாக அவருக்கு சொந்தமான ரூபாய் 600 கோடி சொத்தை ப்ரீத்தி ஜிந்தா பெயருக்கு மாற்ற முன் வந்ததாக கூறப்படுகிறது. தனது குழந்தைகளை விடுத்து ப்ரீத்தி ஜிந்தா பேரில் எழுதி வைக்க காரணம் அவர் காட்டிய அக்கறை தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த சொத்துக்களை ப்ரீத்தி ஜிந்தா ஏற்க மறுத்துவிட்டார். மேலும் தனக்கு அந்த சொத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்றும் அவர் கூறிவிட்டார்.