
ஆதார் கார்டில் உள்ள முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் தற்போது பெயர் மற்றும் முகவரியை மாற்றுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெயரில் இன்சியலை முன்னாள் போடுவதா அல்லது பின்னால் போடுவதா, புள்ளி வைப்பதா அல்லது வைக்கக்கூடாதா என்ற சிக்கல் இருக்கிறது. இந்நிலையில் ஆதார் உடன் PAN எண்ணை இணைக்கும் போது பெயர் மற்றும் இன்சியல் குழப்பம் ஏற்படுகிறது. ஆதார் கார்டு என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற, குழந்தையை பள்ளியில் சேர்க்க, புதிதாக வங்கி கணக்கை ஆரம்பிக்க போன்ற எல்லாவற்றிக்கும் ஆதார் கார்டு இருந்தால் தான் செய்ய முடியும்.
தமிழகத்தில் உள்ள ஆதார் மையங்களில் புதிய ஆதார் பதிவு செய்யப்படும்போது பெற்றோரின் ஆதார் கார்டில் உள்ளது போல பிறப்பு சான்றிதழில் பெயர் இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் தற்போது பெயர், முழு பெயராகவோ அல்லது இனிஷியல் உடன் வரும் முழு பெயர். இனிசியல் முன்னதாகவும், பின்னர் பெயரும் இனிஷியல் பின்னதாக இருந்தாலும், புதிய ஆதார் கார்டு பதிவு செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இனிசியலுடன் பெயர் இல்லாவிட்டாலும் புதிய ஆதாரை பதிவு செய்யலாம்.
ஒருவேளை இன்சியலை சேர்க்க வேண்டும் என்றால் அதை ஆன்லைனில் கூட அப்டேட் செய்து கொள்ள முடியும். முன்னதாக வேலூர் மாவட்டத்தில் ஆதார் மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் உட்பட 7 மையங்கள், தாலுகா அலுவலகங்களில் இயங்கி வரும் ஆதார் மையங்கள் என அனைத்திலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆதார் மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.