மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் லேபில் நடந்தது. இதில் நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, அஞ்சு குரியன், ஷாரா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பேசினர். அப்போது மிர்ச்சி சிவா பேசியதாவது “சூப்பர் ஸ்டார் பிரச்சனை தமிழ்நாடு, இந்தியா, இந்த உலகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
அகில உலக சூப்பர் ஸ்டார் என்பது கேலக்ஸிகளை கடந்து Black Hole கிட்டே போயிட்டோம். நமக்கு போட்டியே கிடையாது என்று அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் பட்டத்திற்கு நாம் ஆசைப்படுவது கிடையாது. என்றைக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அகில உலக சூப்பர் ஸ்டார் நம்மதான் என பேசி உள்ளார்