தீபாவளிக்கு வீட்டை அலங்காரம் செய்ய வீட்டில் உள்ள பேப்பரை வைத்து ஒரு அலங்காரப் பொருளை எப்படி செய்யலாம் என்று குறித்து பார்க்கலாம். பேப்பரில் எளிதில் செய்யக்கூடிய வீட்டு அலங்கார பொருளை செய்வதற்கு முதலில் ஒரு காகிதத்தை வட்டமாக எட்டு சென்டிமீட்டர் அளவிற்கு வெட்டிக் கொள்ள வேண்டும். அதை இரண்டாக மடித்து வெட்டிக்கொள்ள வேண்டும். இரண்டாக வெட்டிய அந்த பாதி அளவு பேப்பரை கூம்பு வடிவில் சுருட்டி பசை வைத்து ஒட்டிக் கொள்ள வேண்டும். அதன் மேல் சிறிதளவு துளை இருக்குமாறு ஒட்டி வைக்க வேண்டும்.

அப்பொழுதுதான் நூலை வைத்து கோர்க்க முடியும். இதே போல தேவைப்படும் அளவிற்கு கூம்புகளை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக நாம் எந்தெந்த வண்ணங்களில் கூம்புகளை தயார் செய்தோமோ அதே வண்ணத்தில் மூன்று சதுர வடிவிலான பேப்பர் துண்டுகளை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதை குறுக்காக மடித்து அதனை திரும்பவும் குறுக்காக மடித்து பாதியாக மடித்துக் கொள்ள வேண்டும். திரும்பவும் அதை மடித்து வளைவு வடிவில் அதை வெட்டினால் ஒரு பூ வடிவில் கிடைக்கும்.

இதேபோன்று அனைத்து வண்ணங்களிலும் உள்ள கலர் பேப்பர்களை வெட்டி கொள்ள வேண்டும். இப்பொழுது மூன்று கலர் பூக்களையும் வெட்டி வைத்த பிறகு ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பசை வைத்து ஒட்டிக் கொள்ள வேண்டும். நடுவில் ஒரு பாசியை வைத்து ஓட்டினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இப்பொழுது ஒரு ஊசியில் நூல் கோர்த்து அந்த கூம்புகளை கோர்த்து இடையில் தேர்மொகொல் பந்துகளை இடையில் சொருகி கொம்புகளை சேர்க்க வேண்டும்.  அதன் பிறகு நீளவாக்கில் ஒரு பேப்பரை நன்றாக உருட்டி அதில் இந்த கூம்புகளை கட்டி தொங்கவிட வேண்டும். அதன் பிறகு அந்த நீல வாக்கில் உள்ள பேப்பரில் செய்து வைத்த பூக்களை வரிசையாக ஒட்டி வைக்க வேண்டும்.