கடலூர் மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனர் பூங்கோதை கூறியதாவது, கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வேளாண் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து கூடுதல் வருவாய் பெற தேசிய மின்னணு வேளாண்மை வர்த்தகத் திட்டம், கடலூர் மாவட்ட வேளாண் விற்பனை துறை மூலம் சிறப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி சேலம் மாவட்டம் மேச்சேரி உழவர் உற்பத்தி நிறுவனத்திற்கு இ-நாம் திட்டத்தின் மூலம் 3 டன் அளவுள்ள பலாப்பழங்கள் 55 ஆயிரம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த பலாப்பழங்கள் வாகனங்கள் மூலம் சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இ-நாம் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் விளை பொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம் என கூறியுள்ளார்.