கேரள மாநிலத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வந்த நவீன் பாபு, தற்கொலை செய்து கொண் சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது. நவீன் பாபு சமீபத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பதவி உயர்வு பெற்று பணியிடமாறுதல் செய்யப்பட்டிருந்தார். அவரது பணியிட மாற்றத்தை முன்னிட்டு, கண்ணனூர் மாவட்ட ஊழியர்கள் பிரிவு உபசார விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு  அழைப்பு இல்லாமல் வந்த பஞ்சாயத்து தலைவர் திவ்யா, நவீன் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நவீன் பாபு, தற்கொலை செய்ய முடிவு செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

நவீன் பாபு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது உடலை மீட்டு, போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் பற்றி கூடுதல் விசாரணை நடைபெற்று வருகின்றது.