கோலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போதும் வலம் வருவதற்கு இவரது பணிவான குணமும், ரசிகர்களுமே முக்கிய காரணம். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இன்டர்வியூ நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளர் பாலாஜி ராஜா படத்தை பற்றியும்,நடிகர் அஜித் குறித்தும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ராஜா படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்தும், நடிகர் வடிவேலுவும் இணைந்து நடிக்கவே இல்லை.

இதற்குக் காரணம் ராஜா படபிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை வடிவேலு “டேய் வாடா, போடா” என்று மரியாதை குறைவாக அடிக்கடி பேசியுள்ளார். இதுகுறித்து நடிகர் அஜித் இயக்குனரிடம் தனக்கு வடிவேலு பேசுவது மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறியும் உள்ளார். இதனால் இந்தப் படத்திற்குப் பின்னர் அஜித் தான் நடிக்கும் எந்த படங்களிலும் வடிவேலுக்கு இடம் அளிக்கவில்லை என கூறினார்.