சீனாவில் உள்ள ஒரு நகரில் -50-க்கும் கீழான வெப்பநிலை நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் மைனஸ் 50-க்கும் கீழான வெப்ப நிலை பதிவாகி வரும் நிலையில் தற்போது சீனாவில் உள்ள மோஹே நகரில் மைனஸ் 50-க்கும் கீழான வெப்பநிலை பதிவாகியுள்ளது. ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் இருக்கும் மோஹே நகரானது சீனாவின் வட துருவம் என்று அழைக்கப்படுகின்றது.

சராசரியாக நகரில் -15 டிகிரி முதல் -30 டிகிரி வெப்பநிலை செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவி வந்த நிலையில் தற்போது வரலாற்றில் முதல் முறையாக -53 டிகிரி செல்ஸியஸ் மோஹே நகரில் கடுமையான குளிர் நிலவி வருவதால் சீனாவில் வானிலை ஆணையம் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. சீனாவில் நிலவும் வெப்பநிலை குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.