நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி கொரோனா  தினசரி பாதிப்பு என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், மத்திய அரசு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கொரோனா  மேலும், பரவாமல் தடுப்பது தான் முக்கிய இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனா உள்ளிட்ட 6 வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கட்டாயம் RT-PCR சோதனை செய்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங் காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்தியா வருவதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு கொரோனா சோதனை செய்திருக்க வேண்டும். சோதனை முடிவு இல்லாதவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்