திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு தெருவில் வழக்கறிஞரான அப்துல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் இருக்கும் மிட்டாய் கடையில் அப்துல் 200 ரூபாய் கொடுத்து அல்வா, மிச்சர் ஆகியவை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடை நிர்வாகத்தினர் ஜி.எஸ்.டி வரி 10 ரூபாய் வசூலித்தனர். ஆனால் அந்த ரசீதில் ஜி.எஸ்.டி பதிவு எண் குறிப்பிடப்படவில்லை. இதனால் வழக்கறிஞர் 10 ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்துல் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் கிளாட்ஸ்டன், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி 5 ஆயிரம் ரூபாய் அபராதம், வழக்கு செலவு தொகை 2000 ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.