நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு CMAT2023 ஆன்லைன் விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை பெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் AICTE உடன் இணைந்து இணைப்பு நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு தகுதி பெற முடியும். இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்புபவர்கள் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க NTA முடிவு செய்துள்ளது. அதன்படி விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி  மார்ச் 13ஆம் தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் https://cmat.nta.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களை செலுத்தலாம் எனவும் ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 13 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.