மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் மறைந்தார். இயக்கம் அழிந்து போய்விடும் என்று இந்த கருணாநிதி கனவு கண்டார், அழியவில்லை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் நான் இருக்கிறேன் என்று தமிழக மக்களுக்கு அன்றைய தினம் அடையாளம் காட்ட புரட்சி தலைவி அம்மா அவர்கள் பிரிந்த இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உடைய ஆட்சியை தமிழகத்திலே ஏற்படுத்தினார்.

1989இல் முதன்முதலாக கழகம் இரண்டாகப் பிரிந்து நான் அப்பொழுது இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அணியிலே இருந்தேன். அப்போது எனக்கு சேவல் சின்னம் கொடுக்கப்பட்டது. அந்த சேவல் சின்னத்தில் முதன் முதலாக 1989 இல் வெற்றி பெற்றேன். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோம்.

அமைச்சர் ஆனேன், உங்களுடைய ஆதரவால் தமிழகத்தில் முதலமைச்சராக எல்லாம் வந்தேன். அப்பொழுது இன்றைய முதலமைச்சராக இருந்த எதிர்கட்சித் தலைவர் பல்வேறு விமர்சனங்களை ஊடகங்கள் வாயிலாக… பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்தினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலே கழக ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த ஆட்சி 10 நாட்கள் தாக்குபிடிக்குமா ? ஒரு மாதம் தாக்குபிடிக்குமா ? மூன்று மாதம் தாக்குபிடிக்குமா? என்று  என கேலி செய்தார். உங்களுடைய மகத்தான ஆதரவின் பேரிலே தமிழக மக்களுடைய பேர் ஆதரவிலே நாலு வருடம் இரண்டு மாத காலம் சிறப்பான ஆட்சி கொடுத்தோம் என தெரிவித்தார்.