ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது.  ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இஸ்ரேலியர்கள் மீது போரை தொடங்கியது ஹமாஸ்க் குழு.

இஸ்ரேல் நேரப்படி அதிகாலை ஐந்து மணிக்கு தாக்குதலை தொடங்கியது ஹமாஸ் குழு. ஒரே நேரத்தில் தரை, வான்,  கடல் வழியாக இஸ்ரேல் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தினர்.  வான்வெளி தாக்குதலின் போது இஸ்ரேலின் தெற்கு பகுதிக்குள் ஹமாஸ் குழு நுழைந்தது. உறக்கத்தில் இருந்த இஸ்ரேலிய ராணுவத்தினர் சிறை பிடித்து விட்டு, ஹமாஸ் குழு முன்னேற்றம். கசாவை ஒட்டி உள்ள ஏழு இஸ்ரேலிய நகரங்களில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் ராணுவத்துடன் சண்டை இட்டு வருகின்றனர்.

ஹமாஸ் குழு இஸ்ரேலுக்குள் நுழைந்த நிலையில் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சரவை சகாக்கள்,  ராணுவ தளபதியுடன் ரகசியிடத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை நடத்தி வருகின்றார். இஸ்ரேலை அழித்து ஒழிப்போம். இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்தீனத்தை விடுவிக்க போர்.  பாலசீனத்தை விடுவிக்க தற்போது தான் சரியான தருணம். பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களுடன் இஸ்ரேல் நோக்கி முன்னேறுங்கள். கையில் கிடைக்கும் ஆயுதங்களுடன் பாலஸ்தீனியர்கள் போருக்கு செல்ல வேண்டும் என ஹமாஸ் குழு அழைப்பு விடுத்துள்ளது.

இஸ்ரேலின் பிரடேட்டர் ரக ட்ரோன்கள் ஹமாஸ் குழுவினரை வேட்டையாடத் தொடங்கியது.  இஸ்ரேலில் நுழைந்த ஹமாஸ் குழுவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் படையினர் மீது பிரடேட்டர் ரக ட்ரோன்கள் குண்டு வீசும் காட்சி வெளியாகியது. ஏழு நகரங்களில் நுழைந்த ஹமாஸ் படையினர் பிரடேட்டர் ரக ட்ரோன்கள் மூலம் வேட்டையாடபடுகின்றனர்.  30000 அடி உயரத்திலிருந்து குண்டு வீசக்கூடிய வல்லமை படைத்தது பிரடேட்டர் ரக ட்ரோன்கள். இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலில் 545 பேர் காயம் அடைந்துள்ளனர், 22 பேர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரம் பற்றி  எரிய தொடங்கியுள்ளது. வானுயர்ந்த கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை குண்டு மழை பொழிவதால் காசா  நகரம் பற்றி எரிய தொடங்கியுள்ளது. ஹமாஸ் தாக்குலில்  70 பேர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை சுகாதார பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டதாக தகவல். ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலின் இரண்டு ஆம்புலன்ஸ் கைப்பற்றியுள்ளனர் இஸ்ரேல் மருத்துவமனைகளில் ரத்தத்திற்கு கடும் தட்டுப்பாடு என தகவல் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக  ரத்தம் தேவை.  பொதுமக்கள் ரத்த தானம் செய்ய முன்வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலின் பின்னணி:

1917 ஆம் ஆண்டு முதல் உலகப்போரின் போது ஒட்டமான் பேரரசை வீழ்த்திய பிரிட்டிஷ் படைகள் பாலஸ்தீனத்தை கைப்பற்றின. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அர்தூர் பால்பேர் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு நிச்சயம் அமையும் என வாக்குறுதி அளித்தார். 1922 ஆம் ஆண்டு லீக் ஆப் நேசன்ஸ் என்ற சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பு பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய தனிநாடு ஒன்று அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தில் மெல்ல யூதர்களின் கை ஓங்கவே அரேபியர்கள் புரட்சியில் ஈடுபட்டனர். 1936இல் முதல் 1939 வரை நடந்த இந்த புரட்சியை பிரிட்டிஷ் அரசு  அடக்கியது. 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை இஸ்ரேல்,  பாலஸ்தீனம் என இரண்டாக பிரித்து ஐநா தீர்மானம் நிறைவேற்றியது. இவை அடுத்து அரேபிய நாடுகளுக்கும்,  இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டது.

8 மாதங்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் வெற்றி பெற்று,  1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல் உருவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு ஆறு நாட்கள் நடைபெற்ற போரில் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை வென்ற இஸ்ரேல்,  அந்நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை,  காசா முனை, மற்றும் கோலன் குன்றுகளை கைப்பற்றியது.

கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை,காசா முனை மற்றும் கோலன் குன்றுகளில் இஸ்ரேலிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 1973 மற்றும் 1982 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இப்பகுதிகளை மீட்க அரேபிய நாடுகள் செய்த முயற்சிகள் தோல்வியை தழுவின. 1993 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே பாலஸ்தீனத்தை தன்னாட்சிப் பிரதேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கையானது. 2005 ஆம் ஆண்டு யாசர் அராபத் மறைவுக்கு  பிறகு முகமது அப்பாஸ் என்பவர் பாலஸ்தீன அதிபராக பொறுப்பேற்றார்.

அதே ஆண்டு காசா பகுதியை விட்டு இஸ்ரேல் வெளியேறியது. 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் என்ற அடிப்படைவாத அமைப்பு காசா பகுதியை கைப்பற்றியது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ்சுக்கும் இடையே கடுமையான  மோதல் நடைபெற்று வருகிறது. கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி அரேபியர்களின் புனித தலமாகவும்,  மசூதியை சுற்றியுள்ள

Western Wall என்ற Temple Mount  யூதர்களின் புனித தலமாகவும் உள்ளது.  ஒருங்கிணைந்த ஜெருசலேமை இஸ்ரேல் தமது தலைநகராக அறிவித்துள்ளது. எனினும் அதை ஏற்க மறுக்கும் பாலஸ்தீனம், அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என போராடி வருகிறது. ஒவ்வொரு வருடமும் இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய தினத்தன்று யூதர்களால் குடி  அணி வகுப்பு நடத்தப்படுகிறது. அரேபியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடத்தப்படும் அணிவகுப்பே இருதரப்பினருக்கும் இடையேயான மோதல் என்பதனை தொடக்கப் புள்ளியாக உள்ளது.