ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவின் உண்மையான பிறந்த தேதி இதுவரை தெரியவில்லை. புனித நூலான பைபிளிலும் இயேசு கிறிஸ்து 25-ஆம் தேதி தான் பிறந்தார் என்பது குறிப்பிடவில்லை. இந்நிலையில் ரோமன் கத்தோலிக்க தேவாலயங்கள் நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகின்றது.

அதே நேரம் டிசம்பர் 24-ஆம் தேதி மாலை ப்ரொடஸ்ட்டன் தேவாலயங்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து இரவு மாசில் கலந்து கொள்வார்கள். ஆரம்பகால கிறிஸ்தவ சமூகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விரும்பவில்லை.

இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஆனால் நான்காம் நூற்றாண்டில் திருச்சபைகள் இயேசுவின் பிறந்தநாளை விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்தனர். இதனையடுத்து இறைவனுக்கு பிடித்த பாடல்களை பாடி வீடுகளில் குடில்கள் அமைத்து கொண்டாடுவார்கள். அன்றைய நாளில் கிறிஸ்மஸ் தாத்தா வந்து பரிசுகளை வழங்குவார்.

கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மட்டும் குறிக்காமல் பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எப்படி வாழ்க்கையில் முன்னோக்கி பயணித்தார் என்பதையும் நினைவு கூறுவதாக கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர். இயேசு கிறிஸ்துவின் தியாகத்திற்கு நன்றியை தெரிவிக்கும் நாளாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகை அமைகிறது.