தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது கோலாகலமாக தொடங்கியுள்ளது. பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடிசாவின் புரி கடற்கரையில் வெங்காயங்களை வைத்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை மணலில் செதுக்கியுள்ளார்.

இந்த சிற்பத்தை உருவாக்க இந்த மாபெரும் சிற்பத்தை உருவாக்க, இரண்டு டன் வெங்காயம் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிற்பம் 100 அடி நீளம் 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்டது என கூறியுள்ளார். உலக சாதனை புத்தகத்தில் இந்த சிற்பம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.