
கடந்த 2024ம் ஆண்டு இந்திய அணி வெறும் 3 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியது. இந்திய அணி முழுக்க முழுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் மீது கவனம் செலுத்தியதால், கடைசி 8 டெஸ்ட் வெற்றி பெறாததால் இறுதிப் போட்டிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் கவனம் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம் நடைபெற உள்ள சாம்பியன்ஷிப் ட்ராபி மீது சென்றுள்ளது.
இதனால் அனைத்து அணிகளும் வருகிற பிப்ரவரி 13ம் தேதிக்குள் அணியை இறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வு குழு ஜனவரி 12ம் தேதி அணியை அறிவிக்கும் என்று கூறப்பட்டது. சாம்பியன்ஷிப் டிராபி போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. இந்த போட்டி ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருக்கும் செய்தியின் படி, சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட தற்கால இந்திய அணி ஜனவரி 12ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும், இறுதிப்பட்டியல் 13ம் தேதி உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்திய அணியின் புதிய ஒயிட்பால் துணை கேப்டனாக ஜூஸ்பிரத் பும்ரா நியமிக்கப்படுவார் என்று கூறுகிறது. முன்னதாக இலங்கை தொடரில் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பையில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இருவரும் துணை கேப்டன் பட்டியலில் இருக்க மாட்டார்கள் என்று தெரிய வருகிறது.
இந்திய அணிக்கான தேர்வில் விஜய் ஹசாரே டிராபியில் சிறப்பாக செயல்படும் வீரர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெறு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முகமது ஷமி விஜய் ஹசாரே தொடரில் பந்துவீச்சு மட்டும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன் டிரோபியின் முதல் போட்டியில் பிப்ரவரி 20ஆம் தேதி வங்கதேசத்துடன் இந்தியா போட்டியிட இருக்கிறது.