செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ், அக்டோபர் 30,  அக்டோபர் 27ஆம் தேதி இந்த மண்ணிற்காக தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுடைய நினைவுகளை போற்றுகின்ற தினமாகவும்,   அக்டோபர் 30ஆம் தேதி தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய நினைவை போற்றுகின்ற விதத்திலே தமிழ்நாடு முழுவதும் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக….  அவர்கள் இந்த மக்களுக்காகவும்,  இந்த மண்ணிற்காகவும்,

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஆற்றிய பணிகளை அடுத்த தலைமுறைகள் நினைவு கூறும் வகையிலே அவர்களிடத்திலே எடுத்துச் சொல்லும் விதமாகவும் நாங்கள் எங்களுடைய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றோம். எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாக நான் சட்டமன்றத்திலே வலியுறுத்திக் கொண்டிருக்க கூடிய….  வலியுறுத்திக் கொண்டிருந்த… நிறைய பேர் வலியுறுத்தக் இருக்கக்கூடிய கோரிக்கையாக…. ஒட்டுமொத்த தமிழகத்திலேயே எப்படி பீகாரிலே ஜாதி ரீதியான கணக்கெடுப்பை எடுத்து,  அதை முறையாக அறிவித்திருக்கிறார்களோ,

அதே போல் தமிழகத்திலும் உடனடியாக ஜாதி ரீதியான கணக்கெடுப்பை நடத்தி,  மக்கள் தொகை அடிப்படையிலே…. அந்த மக்களுடைய எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அவர்களுக்கான இட ஒதுக்கீடை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் முக்குலத்தோர் புலிப்படையினுடைய கோரிக்கை. அதையும் கடந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தெய்வத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய நினைவை போற்றும் விதமாக…

அவர் இந்த தேசத்தின் உடைய சுதந்திரத்திற்காக 20 ஆயிரம் நாட்களுக்கு மேலாக சிறைச்சாலையிலே கொடுமைகளை சந்தித்த….  அந்த தியாக உணர்வை போற்றுகின்ற வகையிலே….  எதிர்கால சந்ததிகளுக்கு அவனுடைய நினைவை நினைவு கூறும் வகையிலே மதுரை விமான நிலையத்திற்கு தெய்வத்திருமகன் பெயரை வைக்க கோரியும்,  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1994லே கள்ளர், மறவர்,

அகமுடையோர் சமூகத்தை தேவரினம் என்று அறிவித்து வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறோம். அதே கோரிக்கையை மீண்டும் இந்த அரசிடையே வலியுறுத்திகிறோம். இந்த அரசு இடத்திலே முன்மாதிரியாக நடந்து கொண்ட பீகாரை போன்று உடனடியாக ஜாதி தன கணக்கு நீங்கள் நடத்துவீர்களே ஆனால்  நிச்சயமாக எல்லாவற்றிற்கும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.