செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 1/2 ஆண்டு காலத்தில் தமிழகத்தில்   மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது திரு.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழக தலைவராக இருந்தார். அந்த கட்சியினுடைய தேர்தல் அறிக்கை அவர் வெளியிட்டார். சுமார் 520 அறிவிப்புகள் வெளியிட்டார். சுமார் 10 சதவீத அறிவிப்பு கூட நிறைவேற்றப்படவில்லை.

ஆனால் பத்திரிக்கையைக்கும்,  ஊடகத்திற்கும் அவர் பேட்டி கொடுக்கின்ற போது …செய்தி வருகின்ற போது…. செய்தி வெளியிடுகின்ற போது… ஆட்சி பொறுப்பெற்று இரண்டரை ஆண்டு காலத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பச்சை பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார். நீங்களும் அதை பத்திரிகையிலும்,  ஊடகத்திலும் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். இது சரிதானா ? என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

அது மட்டும் அல்ல இந்த ரெண்டரை ஆண்டு காலத்தில் கடுமையாக மின்சாரம் கட்டண உயர்வு 12 சதவீதத்திலிருந்து 52% உயர்ந்துள்ளது.  வீட்டு வரி நூறு சதவீதம் உயர்வு,  கடை வரி 150 சதவீதம் உயர்வு. அத்யாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதனால் மக்கள் இன்றைக்கு வாழ்க்கை நடத்துவதே ஒரு சவாலாக இருக்கின்றது. ஆக இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நாம் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தல் மிக மிக சாதகமாக எங்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக்கு இருக்கும் என்பதை நினைவுபடுத்துகின்றேன் என் தெரிவித்தார்.