இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ்பூஷன் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு இருக்கிறது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு என்பது கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக சர்ச்சைகளையை சிக்கியிருக்கிறதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதற்கு தலைவராக  இருந்த பிரிஜ்பூஷன் சிங் மீது ஏராளமானோர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள்.  சிறுமி உட்பட  அவர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள். நீண்ட நாட்களாக போராடி அதற்கு பிறகு தான் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தார்கள்,

அதுவும் நீதிமன்றத்திற்கு சென்றதற்கு பிறகு… சாலைகளில் இறங்கி 40 நாட்களுக்கு மேலான போராட்டம் என்று தொடர்ச்சியாக நடந்து வந்த நிலையில்,  ஒலிம்பிக் சம்மேளனம்  கூட இந்திய மல்யுத்தம் சங்கத்தினுடைய  அங்கீகாரத்தை ரத்து செய்வதாக அறிவித்து இருந்தார்கள்.

தேர்தல் நடத்தப்படவில்லை என்பதை காரணம் காட்டி பிறகு தேர்தல் நடத்தப்பட்ட போது பிரிஜ்பூஷன் சிங்கின் ஆதரவாளர்களும்,  நெருங்கிய கூட்டாளிகளுமே அந்த போட்டியில் கலந்து கொண்டு அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் தலைவராக பிரிஜ்பூஷன் உடன் மிகவும் நெருங்கிய நபராக அறியப்பட்ட சஞ்சய் சிங் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

முடிவுகள் வெளியாகி 3  நாட்களில் கூட ஆகாத நிலையில் அண்டர் 15, அண்டர் 20 என்று சொல்லப்படக்கூடிய…. அந்த வயதினருக்கான தேசிய அளவிலான மல்யுத்த போட்டிகளை நடத்துவதற்கான ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது இந்த கூட்டமைப்பு. அதில் நிறைய முறைகேடுகள் இருக்கிறது, விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக இந்த  கூட்டமைப்பையே சஸ்பெண்ட் செய்திருக்கிறது இந்திய விளையாட்டு துறை அமைச்சகம்.

இது மிக மிக முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு கூட்டமைப்பின் செயல்பாடுகளை இடைக்காலமாக நிறுத்தி வைத்திருக்கிறது மத்திய அரசு என்பதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதில் நிறைய பாதகங்கள் என்பது ஏற்படும.  குறிப்பாக அடுத்ததாக எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க முடியாமல், இந்த மல்யுத்த கூட்டமைப்பு அப்படியே முடங்கிவிடும்,